நிதானமும் அவதானமும் வேரறுந்து போகும்போது...

நாளுக்கு நாள் ஊடகங்களில் வெளிவரு கின்ற செய்திகளால் இதயம் கருகிப் போகிறது.

அந்தளவுக்கு கொடூரமான செய்திகள் எம் செவிகளில் பதிந்து இதயத்தை எரித்துக் கருக்கு கிறது.

புகையிரதப்பாதை என்று தெரிந்தும் அவ தானமாக இருக்க வேண்டிய கார்ச்சாரதி அவ தானம் தொடர்பில் எந்தக் கவனமும் செலுத்தாமையால் நான்கு பெண்கள் பலியாகின்ற மிகப் பெரும் கொடூரம் நடந்தது.

இதேபோன்று தொலைபேசியில் கதைத்தபடி வாகனம் செலுத்துகின்ற சாரதிகள், தொலை பேசியில் சண்டை பிடித்தபடி மோட்டார் சைக் கிளை வேகமாகச் செலுத்துவோர், வாகனங் களை முந்துகின்ற போட்டியில் சின்னஞ்சிறுசு களை கொன்று பசி தீர்க்கின்ற பிரகிருதிகள் என ஒரு பெரும் அவலம் நம் மண்ணில் நடந் தாகின்றது.

இதுதான் என்றால், இரண்டு வயதுப் பால கன் உழவுஇயந்திரச் சில்லில் நசியுண்டு பலியானான்; தந்தை உழவு இயந்திரத்தைச் செலுத்தியபோது நடந்த சோகம் என்பதான செய்திகள் நினைக்கவும் கேட்கவும் மனித வாழ்வை வெறுக்க வைக்கக் கூடியவை.

ஆக, உழவு இயந்திரச் சில்லிலும் மற்றும் வாகனங்களின் சில்லுகளிலும் நசியுண்டு உயிரிழந்த சிறுபிள்ளைகளின் பட்டியல் நீண்டு செல்கிறது.

இவ்வாறு நடக்கின்ற மரணங்களின் அடிப்படை என்னவென்று ஆராய்ந்தால், நிதானம்; அவதானம் என்ற இரண்டும் நம்மிடம் அறவே இல்லாத நிலைமை என்பதை நாம் கண்டறிய முடியும்.

ஒரு வாகனத்தை செலுத்துவதற்கு ஆயத்த மாகும்போது, வாகனத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்து அதன் நான்கு சில்லுகளையும் வாக னத்தின் கீழ்ப்பகுதியையும் உற்றுப்பார்த்து விட்டு வாகனத்தை எடுக்கின்ற நடைமுறை இருக்குமாக இருந்தால், பிள்ளைகளின் உயிர்கள் மட்டுமல்ல நாய்க்குட்டி, பூனைக்குட்டி போன்ற ஏனைய ஜீவராசிகளின் உயிர்களை யும் பாதுகாக்க முடியும்.

எனினும் நிதானமின்மையும் அவதானக் குறைவும் எங்களைத்தன்பாட்டில் இயக்குகிறது.

தொலைபேசியில் கதைத்தபடி வாகனத் தைச் செலுத்தும்போது தொலைபேசியின் உரையாடல் நம் மனநிலையில் எத்தகைய தாக் கத்தை ஏற்படுத்துகின்றதோ அந்தத் தாக்கம் விபத்தாக, மரணமாக மற்றவர்களின் உயிரைக்காவுகொள்கின்ற கொலையாக நடந்து முடிகிறது.

தொலைபேசி அழைப்பு வரும்போது வாக னத்தை ஓரமாக நிறுத்தி கதைக்கின்ற பழக்கமோ அல்லது வாகனத்தை உரிய இடம்வரை செலுத்திவிட்டு பின்னர் தொலைபேசி உரை யாடலைச் செய்கின்ற நிதானமோ எங்களிடம் இல்லை.

இதனால் எத்தனையோ மனித உயிர்கள் அநியாயமாகப் பலியாக; அதனோடு தொடர்புபட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணீர் விடுகின்ற துயரம் நீண்டு செல்கிறது.

இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டுவதாயின் நிதானத்தையும் அவதானத்தையும் பின்பற்றுங்கள். எல்லாம் நன்றே நடக்கும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila