
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்திருந்த முறைப்பாடு ஒன்று தொடர்பில் இன்று வாக்குமூலம் அளிப்பதற்காக சென்றிருந்த போது ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பேர்பச்சுல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திடம் இருந்து 25 லட்சம் ரூபாயை பெற்றுள்ளது. நீதிமன்றங்களும் சட்டத்தரணிகளும் திருடர்களை பிடிக்க உள்ளனர்.
எனினும் திருடர்களை பிடிக்க வேண்டிய சட்டத்தரணிகள் சங்கம் பேர்பச்சுல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திடம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 லட்சம் ரூபாயை பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் எமது நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. மத்திய வங்கியின் பிணை முறி மோசடி 2015 ஆம் பெப்ரவரி, மார்ச் மாதமளவில் நடந்ததுள்ளது.
பேர்பச்சுல் ட்ரெஷரீஸ் நிறுவனம் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனம் என்பது முழு உலகத்திற்கும் தெரியும். அந்த நிறுவனத்திடம் இருந்து சாதாரணமா ஒருவர் பணத்தை பெற்றிருந்தால், அவர்களை மன்னித்து இருக்கலாம்.
எனினும் இலங்கையில் படித்த அறிவாளிகளை கொண்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அலோசியஸ் உள்ளிட்ட குழுவினரிடம் 25 லட்சம் ரூபாயை பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நான் தகவல் வெளியிட்டதும் அந்த பணத்தை திருப்பி கொடுக்க தயார் என சட்டத்தரணிகள் சங்கம் கூறியது. எனினும் இன்னும் திருப்பிக்கொடுக்கவுமில்லை.
எவருக்கு மன்னிப்பு வழங்கினாலும் சட்டத்தரணிகள் சங்கத்தை மன்னிக்க முடியாது எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.