![]()
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் தொடர்பாக அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது என்றும், பொறுமையாக ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசித்தே முடிவெடுக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
|
இதுகுறித்து கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா -
“நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. அவ்வாறு முடிவுகளைச் சொல்வது பொருத்தமில்லையென்பதால், அந்த நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனாலும், கலந்துபேசி ஒரு தீர்மானம் எடுத்து, எங்களுடைய முடிவுகளை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வோம்” எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முடிவெதனையும் எடுக்கவில்லையென, அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
“ஐ.நா தீர்மானத்துக்கமையவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த கொள்கைகள் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னரே, எமது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளோம். தற்போதுள்ள அரசியல் நிலவரப்படி, அரசியல் நபர்களின் அடிப்படையில், எந்தவொரு முடிவையும் எடுக்க இயலாது. எங்களால் எடுக்கப்படும் முடிவு, கொள்கை அடிப்படையிலேயே எடுக்கப்படும்.நாட்டில், பல முக்கியமான விடயங்கள் நடைபெற வேண்டியுள்ள நிலையில், மக்களின் நலன் கருதி முடிவெடுக்கப்படல் வேண்டும்.
எனவே, தற்போது, என்னால் எந்தவொரு முடிவையும் உறுதியாக் கூற முடியாது. தனிக்கட்சிகளைப் பற்றி நான் சிந்திக்கவில்லை, சரியான அவதானம் செலுத்தப்பட்டதன் பின்னரே, முடிவு பற்றி அறிவிப்போம். என்றார்.
இதனிடையே, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் ஏமாற்றமடைந்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகியமை, அதன் பின்னர், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை ஆகியன, "தேசிய அரசாங்கம் என்ற எண்ணத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். தேசிய அரசாங்கம், அதன் முழு ஆட்சிக் காலத்துக்கும், அதைத் தாண்டியும் தொடர வேண்டும் என்பதே, கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்தது.ஃ
நாட்டின் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இரண்டு கட்சிகளும் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டும் என்ற, எமது கொள்கைகயின் அடிப்படையில் நாம் செயற்படுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை" என அவர் கூறினார்.
|
அரசியல் குழப்பம் : கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?
Related Post:
Add Comments