அரச சொத்தும் அவர்களிற்கே: அதற்கும் தீர்மானம்!

வடமாகாணசபை உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட அரச சொத்துக்கள் அவர்களிற்கே உரியதென இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் மக்களிற்கு சேவையாற்ற ஏதுவாக அலுவலகங்களை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவ்வலுவகங்களிற்கு கணணிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சுமார் 16மில்லியன் செலவில் கொள்வனவு செய்து வழங்கப்பட்டிருந்தது.அதிலும் குறிப்பாக சயந்தன் உள்ளிட்ட பலர் தமது வதிவிடங்களிற்கு ஏசி வசதிகளை பொருத்தியிருந்தனர்.

இந்நிலையிலேயே அவ்வாறு 16மில்லியனிற்கு வழங்கப்பட்ட அரச சொத்தினை வீடு செல்லும் மாகாணசபை உறுப்பினர்களிடமிருந்தும் அமைச்சர்களிடமிருந்தும் மீள அறவிடப்பட்டிருக்கவில்லையென மத்திய கணக்காய்வு திணைக்களம் கண்டறிந்திருந்தது.

இந்நிலையில் இன்று இவ்விவகாரமும் எடுத்துக்கொள்ளப்பட்டு உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட சொத்துக்கள் அவர்களிற்கே உடமையெனவும் அதனை மீளப்பெறத்தேவையில்லையெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2016-17ம் ஆண்டுகளில் இத்தகைய வசதிகள் வழங்கப்பட்ட போதிலும் பின்னர் மாதாந்தம் மக்கள் சந்திப்புக்களிற்கான அலுவலகங்களை வைத்திருக்கவென மாதம் தோறும் 50ஆயிரம் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே ஏற்கனவே வழங்கப்பட்ட சொத்துகளையும் உறுப்பினர்களிற்கு உடமையாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila