![]()
சில சதிகாரர்களின் வலைகளில் மஹிந்த ராஜபக்ஷ, சிக்கிக்கொண்டார் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்ற ஆசையில், மஹிந்த ராஜபக்ஷவை பலிகொடுத்துள்ளார் என்றும், ஜேவிபி தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
|
மைத்திரி - மஹிந்த கூட்டணியின் சர்வாதிகார போக்கினை தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளோம். ரணிலை பிரதமராக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் எமக்கு இல்லை.
அரசியல் அமைப்பினை மீறியதாகவோ அல்லது மனநிலை சரியில்லை என கூறி ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டுவர முடியும். ஆனால் அந்த நிலைமைக்கு இன்னமும் நாம் வரவில்லை. ஆகவே இப்போதாவது ஜனாதிபதி நிலைமைகளை சரியாக விளங்கிக் கொண்டு ஜனநாயகத்துக்கு இடமளிக்க வேண்டும்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது கூட்டணியும் வலுக்கட்டாயமாக ஆட்சியை கைப்பற்றி சர்வாதிகார போக்கில் செயற்பட ஆரம்பித்ததை அடுத்தே நாம் அனைவரும் நீதிமன்றம் செல்ல தீர்மானம் எடுத்தோம். எனினும் சபாநாயகர் கரு ஜெயசூரிய நேர்மையாக தனது கடமையை செய்தார் என்பதை நாம் கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
|
பலிக்கடா ஆக்கப்பட்ட மஹிந்த!
Related Post:
Add Comments