ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் இன்றைய தினம் கலைக்கப்பட்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மைத்திரியின் கையொப்பத்துடன் அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது, அத்துடன் இம்மாதம் 19ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி நிறைவுறும் நிலையில், நாடாளுமன்றின் முதல் அமர்வு ஜனவரி மாதம் 17ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

