பாராளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்பட லாம் என்ற ஊகங்கள் நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ளது.
அந்தளவுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை பலவீனப்பட்டுள்ளது என்பது ஏற்றுக் கொள்ளப் படவேண்டிய விடயமாகும்.
எனினும் பாராளுமன்றத்தைக் கலைக் கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என் றும் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான் கரை வருடங்களைப் பூர்த்தி செய்தபின்பே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என் றும் அரசியலமைப்பைக் கற்றறிந்தார் வியாக் கியானம் செய்கின்றனர்.
எதுஎவ்வாறாயினும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தைக் கலைப்ப தாக ஜனாதிபதி அறிவித்தால் அதற்கு மாற் றுக்கருத்தை அல்லது மாற்றுத் தீர்ப்பை எங் கும் பெற முடியாது என்பதும் இங்கு நோக்கு தற்குரியது.
ஆக, மகிந்த ராஜபக்வை பிரதமராக நிய மித்தமை அரசமைப்புக்கு விரோதமானது என்ற கருத்து வலுப்பெற்றிருந்தபோதிலும் அது தொடர்பில் நீதிமன்றத்தை நாடுகின்ற செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எவரும் முன்னெடுக்காதவரையில் இலங் கையின் அரசியலமைப்பு என்பது இன்னமும் சிக்கலும் குழப்பங்களும் நிறைந்ததாக இருக் கின்றது என்பது மட்டும் உண்மையாகின்றது.
இந்த அடிப்படையில் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக அதிரடியாக அறிவித்தால் அந்த அறிவித்தலையும் ஏற்றுக் கொள்வதைத் தவிர மாற்றுவழி இல்லை என்பதே உண்மை.
தவிர, பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற ஆர்வம் பிரதமர் மகிந்த ராஜபக் தரப்பிடம் நிறையவே இருக்கின்றமை யால், அந்த விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரக்கூடிய சூழ்நிலை உண்டு.
இதற்கு மேலாக தற்போது பிரதமர் பதவி யில் இருக்கின்ற மகிந்த ராஜபக் தனக்கான பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றத்தில் நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் அது ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெற்றியாகவும் மைத் திரியின் அதிரடி முடிவுக்கு எதிர்ப்பாகவும் அமையும்.
இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாகவே தான் பதவியில் இருந்து விலகி தன் வீட்டுக்குச் சென்றுவிடுவ தாக ஜனாதிபதி மைத்திரி ஏலவே அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு ஓர் அவசர முடிவு என்றும் இந்த அறிவிப்பை தான் விட்டிருக்கக் கூடாது என்றும் நினைக்கின்ற கட்டத்திலேயே ஜனாதி பதி மைத்திரியின் மனநிலை உள்ளது என்பது நிராகரிக்க முடியாத உண்மை.
இவ்வாறானதோர் சூழ்நிலையில் எல்லாக் குழப்பங்களுக்கும் தீர்வாக பாராளுமன்றத் தைக் கலைத்துவிடுவதுதான் ஒரே வழி என்ப தாக நிலைமை மாறியுள்ளது.
இதை இன்னும் விளக்கமாகக் கூறினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில்
விக்கிரமசிங்கவுக்குப் பாடம் புகட்ட நினைத்து அர சியலமைப்பைத் தவறாகப் பயன்படுத்துகின்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைக் கைதியாகியுள்ளார் என்பது மட்டுமே இப்போதைக்கு நாம் கூறக்கூடிய விடயமாகும்.