இறுதி வரைக்கும் புலிகளுக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டுக்காக சித்தார்த்தனுக்கு காலம் கடந்தேனும் ராஜபக்ச கௌரவம் வழங்க வேண்டும் என பேராசிரியர் ராஜிவ விஜயசிங்க, (முன்னாள் அமைச்சர், மகிந்த ஆதரவாளர், மகிந்த காலத்தில் சமாதான செயலகத்தின் செயலாளர் நாயகம்) தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
குறித்த தகவலை யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட சட்ட விரிவுரையாளர் குருபரன் குமாரவடிவேல் தனது முகநூல் தளத்தின் ஊடாக பதிவேற்றியுள்ளார்.
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு பல சிறுபான்மை இன கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்து வருவதுடன் அவர்களுக்கான அமைச்சுப் பொறுப்பினையும் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்த் தரப்புக்கள் பலவற்றுடனும் சமரசப் பேச்சுக்கள் நடந்து வருகின்றன.
வடகிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்ச தரப்பினர் சமரசப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தொடர்பில் இவ்வாறான ஒரு பதிவு இடப்பட்டுள்ளது.
Add Comments