பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தற்போதைய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லையென உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றன. இதன்போதே இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் 49 பேரையும் எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கையொப்பம் இடப்பட்ட நிலையில், குறித்த மனு கடந்த 23 ஆம் திகதி, தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை, மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜூன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதிகள் குறித்த மனு மீதான விசாரணைகளை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தனர்.
அதற்கமைய இன்று விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு இடைக்காலத் தடை!
Posted by : srifm on Flash News On 10:23:00
Related Post:
Add Comments