![]()
“சர்வாதிகாரிகளை நிராகரிப்போம்“ எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது. ஜனநாயத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
|
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலுமிருந்து வருகை தந்திருந்த சுமார் 250 இளைஞர்கள் ஒன்றுதிரண்டு, வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாகவிருந்து ஊர்வலமாக இலுப்பையடியை சென்றடைந்து அங்கிருந்து வைத்தியசாலை சுற்றுவட்டத்தினுாடாக குள வீதியை அடைந்து மீண்டும் பாடசாலை முன்றலை வந்தடைந்திருந்தனர்.
இதன்போது இலங்கையில் சர்வாதிகாரத்தினை நிராகரிப்போம் எனும் வாசகங்கள் எழுதப்பட்ட கொடிகளை தாங்கியவாறும் ஜனநாயகம் வேண்டும் சர்வாதிகாரம் வேண்டாம் என கோசத்தினை எழுப்பியவாறும் இளைஞர்கள் காணப்பட்டனர்.
![]() ![]() |
சர்வாதிகாரிகளை நிராகரிப்போம் - வவுனியாவில் ஊர்வலம்!
Related Post:
Add Comments