![]()
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் இருப்பதால், இலங்கையில் இருந்து கறிவேப்பிலை கொண்டு வருவதற்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதித்துள்ளன. இத்தாலி, சைப்பிரஸ், கிரேக்கம் மற்றும் மோல்டா ஆகிய நாடுகளுக்குள் இலங்கை கறிவேப்பிலையை கொண்டுவர வேண்டாமென பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
|
இந்த அறிவுறுத்தலை கடனியா, சிசிலி மற்றும் இத்தாலியிலுள்ள இலங்கை கொன்சியூலேட் காரியாலயங்கள் வெளியிட்டுள்ளன.
அதிகளவான கறிவேப்பிலைகளை கொண்டு வருகின்றமையானது, ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் உணவு பொருட்களின் ஏற்றுமதியில் எதிர்மறை மாற்றங்களை ஏற்படுத்தலாமென ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கையின் கொன்சியூலேட் காரியாலயங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதன் காரணமாக இலங்கையிலுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பிரத்தியேக பைகள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
இலங்கை கறிவேப்பிலைக்கு ஐரோப்பிய நாடுகள் தடை!
Related Post:
Add Comments