மாவனல்ல பிரதேசத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அத்தோடு ஒரு அமைச்சு பதவியை பெற்றுக்கொள்வதற்காக நான் ஒருபோதும் ஜனாதிபதியிடத்தில் மன்னிப்பு கூறமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “மஹிந்த ராஜபக்ஷ அன்று என்னை சிறையில் அடைத்தபோது, மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்வேன் என கூறினார். அதற்கு நான் இணங்க மறுத்துவிட்டேன்.
வெறும் மன்னிப்புக்காக பல மில்லியன் ரூபாய்கள் பேரம்பேசப்பட்டது, ஆனால் நான் என் நிலைப்பாட்டை மாற்றவில்லை. இந்நிலையில் அமைச்சு பதவியைப் பெறுவதற்காக நான் இன்று மன்னிப்புக் கேட்பேன் என்று நினைக்கிறீர்களா?” என தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீதான கடுமையான விமர்சனத்தை அடுத்து புதிய அமைச்சரவையில் அமைச்சு பதவியை வழங்க ஜனாதிபதி மறுப்பு தெரிவித்தார்.
இருப்பினும் பிரதேச அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராக நியமிக்க ரணில் விக்ரமசிங்க அவரது பெயரை பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.