அமெரிக்கா டொலருடன் ஒப்பிடும் போது இன்றைய தினமும் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் அமெரிக்கா டொலரின் விற்பனை விலை 183.17 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 179.20 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, பிரித்தாணிய பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 234.07 ரூபாயாக பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 210.43 ரூபாயாகவும், பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.