போதை தலைக்கேறி வகுப்பறையில் மயங்கிக் கிடந்த மாணவர்கள்!


வலி.வடக்கு பகுதி பாடசாலை ஒன்றில்  தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர்கள் மூவர் நேற்று போதை மாத்திரைகள் உட்கொண்டு, போதை ஏறிய  நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது.
வலி.வடக்கு பகுதி பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர்கள் மூவர் நேற்று போதை மாத்திரைகள் உட்கொண்டு, போதை ஏறிய நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது.
நல்லிணக்க புரத்தில் உள்ள இரு மாணவர்களும் தெல்லிப்பழையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்றுக் காலை பாடசாலைக்குள் சென்றுள்ளனர். அதில் நல்லிணக்கபுரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தனது சகோதரனிடம் (வயது 16) இருந்து போதை மாத்திரைகளை (20 மாத்திரைகள்) பெற்று வந்துள்ளார். அதில் ஒருவர் 5 மாத்திரைகளையும் மற்ற மாணவன் 4 மாத்திரைகளையும் மூன்றாவது மாணவன் 3 மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளனர். பின்னர் வகுப்பறையினுள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
குறித்த விடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் தம்மை அறியாமல் பேசத்தொடங்கியுள்ளனர். நிலமையை அறிந்த அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
பின்னர் வைத்தியசாலையில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலைக்கு சென்று மாணவர்களிடம் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த மாத்திரைகள் அவர்களது சுற்றயல்களில் உள்ள மருந்தகங்களில் சாதாரணமாக கிடைப்பதாகவும், தற்போது பயன்படுத்திய மாத்திரை தனது சகோதரனிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும் ஒரு மாணவர் விசாரணையில் தெரிவித்திருந்தார்.
அவர்கள் எந்த மருந்தகங்களில் குறித்த மாத்திரைகளை கொள்வனவு செய்பவர்கள் என்ற தகவலை பெற்றுக்கொண்டு மாவிட்டபுரத்துக்கு அண்மையில் உள்ள குறித்த இரு மருந்தகங்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் சென்று பரிசோதனை மேற்கொண்டதுடன் அங்கிருந்த மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் குறித்த மருந்தகங்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளனர். குறித்த விடயம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila