போர்க்குற்றவாளி ஒருவர் இராணுவ பிரதானியாவது இலங்கையை மிகவும் கீழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது நீதிக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா

2009-ம் ஆண்டு மருத்துவமனைகள், உணவினை பெறுவதற்காக வரிசையில் நின்றவர்கள் மற்றும் முகாம்கள் மீது வேண்டுமென்றே தாக்குதலை மேற்கொண்டு ஒரு சில மாதங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான 58ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா விசாரணையை எதிர்கொள்ள வேண்டியவர் என ஐக்கிய நாடுகள் விசாரணை குழு தெரிவித்திருந்தது.

சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவு பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் சுட்டுக் கொல்லப்படுவதற்கும் நூற்றுக் கணக்கானவர்கள் காணாமல் போவதற்கும் சித்திரவதைகளுக்கும் காரணமானவர்.2009 மே 18ஆம் திகதி வெள்ளைக் கொடியுடன் சரணடைதல் இடம் பெற்ற வேளை அப்பகுதியில் சவேந்திர சில்வா காணப்பட்டார்,

விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் தலைவர்களுடன் சில்வா கைகுலுக்குவதை நான் நேரில் பார்த்தேன் என ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிற்கு ஒவ்வொரு முறை செல்லும்போது கைது செய்யப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் இராணுவ பிரதானியொருவரை இலங்கை தற்போது கொண்டுள்ளது . மேஜர் ஜெனரல் சில்வா குறித்த ஆவணமொன்றை நாங்கள் தயாரித்துள்ளோம். அதனை விரைவில் வெளியிடுவோம். சவேந்திர சில்வா மீது சர்வதேச குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்.

அதிகம் தேடப்படும் இலங்கையர்களில் மிக முக்கியமானவர் இவர் என்பதில் சந்தேகமில்லை. எனினும் ஒரு தசாப்தகாலத்திற்கு பின்னர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய அவருக்கு துயரம் அளிக்கும் விதத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

2009 யுத்தத்திலிருந்து தப்பி வெளிநாட்டுக்கு தப்பியோடிய பலர் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வர்களிற்கு அவமரியாதை செய்யும் நியமனம். இது இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளையும் பாதிக்கின்றது. முழு நாட்டிற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியவரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவுமான ஒருவரிற்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து ஜனாதிபதி சிறிசேன என்ன கருதுகின்றார் என்பது புரியவில்லை.

கடந்த சில வருடங்களில் சவேந்திர சில்வாவின் பதவி உயர்வினை உன்னிப்பாக கண்காணித்து ஆராய்நதிருந்தால் இந்த பதவி உயர்வை தடுத்திருக்கலாம் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila