![]()
முல்லைத்தீவு, நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்த, குருகந்த ரஜமகா விஹாரை என்ற பெயரில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு, அப்பகுதியில் அமைத்த பிரம்மாண்ட புத்தர்சிலை இன்று திறந்து வைக்கபட்டுள்ளது.
|
முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நாளை பௌத்த பிக்கு மற்றும் பிள்ளையார் ஆலயத்தினருக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று புத்தர் சிலை திறக்கப்படுவதை அறிந்து செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு குறித்த விகாரை பிக்குவாலும் புல்மோட்டை அரிசிமலையிலிருந்து வருகைதந்த பிக்குகளாலும் இடையூறு ஏற்படுத்தப்பட்டது.
நேற்றையதினம் தகவலறியும் சட்டம் மூலம் ( RTI ) பெற்ற தகவல்படி பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பியது யார் என்றும், விகாராதிபதி மிரட்டும் தொனியில் ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பினார் . பொலிசாரும் பிக்குகளும் இணைந்து நீண்டநேரம் குறித்த ஊடகவியலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் செய்தி சேகரிக்கவிடாது தடைகளை ஏற்படுத்தினர் . அத்தோடு குறித்த ஊடகவியலாளரை பொலிசாரும் பிக்குகளும் இணைந்து புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
![]() ![]() ![]() |
நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் சிலை திறப்பு - நாயாறில் பிக்குகள் அடாவடி!
Posted by : srifm on Flash News On 03:39:00
Related Post:
Add Comments