இலங்கை ஆட்சியாளர்களிடம் யாரேனும் நீதியை எதிர்பார்ப்பார்களாயின் அதுவே மிகப்பெரும் மட மைத்தனமாகும்.
தமிழர்கள் என்று வந்துவிட்டால் பரம எதிரிகளாக இருக்கக்கூடிய சிங்களவர்களும் ஒன்று சேர்ந்து விடுவர். இதுவே யதார்த்தம்.
அந்த வகையில் போர்க்குற்ற விசாரணை ஏதேனும் நடந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வுக்கோ அல்லது கோத்தபாய ராஜபக்ஷவுக்கோ எந்தத் தண்டனையும் வழங்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆக, போர்க்குற்றவாளிகளில் முதன்மையான வர்கள் என்று தமிழ் மக்கள் கருதுகின்றவர்களுக்கு தண்டனை வழங்கப்படமாட்டாது என்றால், போர்க்குற்ற விசாரணை நடத்தப்படுவதனால் எந்த வித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படமாட்டாது என்பது உறுதியாகின்றது.
வன்னிப் பெருநிலப்பரப்பில் மிகப்பெரிய இன அழிப்பு நடந்த போது இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் மகிந்த ராஜபக், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றியவர் கோத்தபாய ராஜபக்ஷ .
வன்னிப் போரின் போது தமிழ் மக்கள் வாழுகின்ற இடங்களில் நடந்த அத்தனை தாக்குதல்களின் போதும் ஏகப்பட்ட தமிழ் மக்கள் உயிரிழந்த னர். இதற்கான உத்தரவுகள் பாதுகாப்புச் செயலர் ஊடாகவே வழங்கப்பட்டது.
இதுதவிர வெள்ளைக் கொடி விவகாரம் மற் றும் படையினரிடம் சரணடைந்த போராளிகள் விவகாரம் போன்றவற்றுக்கும் பதில் தரவேண்டியவர் கோத்தபாய ராஜபக்ஷ என்பது மறுக்க முடியாத உண்மை.
நிலைமை இதுவாக இருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன் னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்பட மாட்டாது என்று அரசு அறிவித்திருப்பதானது, போர்க் குற்ற விசாரணைகள் எவ்வாறாக அமையும் என்பதற்குக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.
மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு தண்டனை வழங்காமல், படை அதிகாரிகளுக்கும் படையினருக்கும் தண்டனை வழங்குவதென்பது ஒருபோதும் சாத்தியமாகாது.
ஆக, ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூடி போர்க் குற்ற விசாரணையை நடத்துமாறு இலங்கை அரசுக்கு உத்தரவிட, இலங்கை அரசு யார் யாருக்கு தண்டனை வழங்கப்பட மாட்டாது என்பதை மிக வெளிப்படையாக அறிவித்துள்ளது.
அவ்வாறாயின் இலங்கையில் நடக்கப்போகும் உள்ளக விசாரணையில் போர்க்குற்றவாளிகளாக முன்னாள் புலிப் போராளிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதே நடந் தேறப் போகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது.
இத்தகையதொரு நிலைமையை ஏற்படுத்துவ தற்காக இலங்கை அரசு தமிழ் அரசியல் தலைமை க்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வழங்கி தமிழர்களின் எதிர்ப்புக்கு சமாதி கட்டி விட்டது.
என்ன செய்வது? தமிழினத்தின் விலை போகின்ற தலைமையும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற போக்கும் இராஜதந்திரமற்ற அரசியலும் சேர்ந்து எங்கள் இனத்தை வெறுவிலியாக்குகின்றன.
ஆன தமிழ் அரசியல் தலைமை எங்களுக்கு இருந்திருக்குமாயின் தமிழ் அரசியல் கைதிகளு க்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்.
ஏதோ தமிழ் மக்களை கடவுள் காத்தாலன்றி மீட்சி இல்லை என்பது மட்டும் உறுதியாகின்றது.