இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகளுக்கு தடை விதித்த அமெரிக்கா

 கணிசமான ஊழலில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளையும் விசா கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேன, அதிக விலைக்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்த இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, இலங்கை விமானப்படைக்கு மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்வதில் ஊழல் மோசடித் திட்டத்தை முன்னெடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், பிரிவு 7031(c) இன்கீழ், குறித்த இருவர் மற்றும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்கள், அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுத்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகளுக்கு தடை விதித்த அமெரிக்கா | Us Sanctions Two Former Sri Lankan Officials

கபில சந்திரசேன கணிசமான ஊழலில் ஈடுபட்டதாக, இராஜாங்கத் திணைக்களம் பகிரங்கமாகப் பெயரிடுகிறது. இலங்கைக்கு எயார்பஸ் விமானங்களை சந்தை விலைக்கு மேல் கொள்வனவு செய்வதை உறுதி செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்த போது சந்திரசேன லஞ்சம் பெற்றார்.


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila