பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு பெற்ற பயணத்தடை உத்தரவின் அடிப்படையில் சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று வந்தடைந்த போது, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க பிரிவினர் அவரை பொறுப்பேற்று விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டு பிரித்தானிய குடியுரிமை பெற்ற கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.