இராணுவம் மக்கள் வாக்களிப்பை தடுக்கும் எனவும் நான் கருதவில்லை. எனினும் வடக்கின் நிலைமை தென்பகுதியை விட வித்தியாசமானது என்பது எங்களுக்கு தெரியும். வெளிநாட்டவர்கள் தென்பகுதியில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் வடக்கில் எனது உத்தியோகத்தர்கள் கூட படையினரிடம் அனுமதி பெறவேண்டும். நாட்டின் ஏனைய பகுதிகளை விட அதிகளவான இராணுவஆட்சி வடக்கில் காணப்படுகின்றது. வடக்கு மக்கள் வாக்களிக்க விரும்பினால், அந்த பகுதி அரசியல்வாதிகள் அவர்களை வாக்களிப்பதை தடுக்க விரும்பாவிட்டால், வேறு எவரும் மக்களை மிரட்ட முடியாது. வடபகுதியில் மக்களை யாராவது மிரட்டி அச்சுறுத்தி வாக்களிக்க விடாமல் செய்தனர் எனத் தெரிய வந்தால் முழுத் தேர்தலையும் இரத்துச் செய்துவிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். |
வடபகுதி மக்களை அச்சுறுத்தி வாக்களிக்காமல் செய்தால் தேர்தலை முழுமையாக இரத்துச் செய்வேன்! - மஹிந்த தேசப்பிரிய
Related Post:
Add Comments