இராணுவத்தினர் நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் தனியார் வகுப்புக்களுக்கு சென்று இராணுவத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்காக பிரச்சாரம் செய்துள்ளனர்.
யுத்த வெற்றி தொடர்பில் மாணவர்களை இராணுவத்தினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் அறிந்து கொண்ட காலி மாவட்ட துணைத் தேர்தல் ஆணையாளர் பிமல் இந்திரஜித், தெளிவுபடுத்தல் நிகழ்வினை இடைநிறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நன்மதிப்பை மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் நோக்கில் படையினர் இந்தப் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இராணுவத்தினர் மாணவர்களின் வகுப்புக்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வருவதாக தமக்கு முறைப்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களை படையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு யுத்த பற்றி கூறி மாணவர்களுக்கு தெளிவூட்டியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சார நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையில் இராணுவத்தினர் என்ன நோக்கத்திற்காக இந்த தெளிவுபடுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தியதன் பின்னர், தெளிவுபடுத்தல்களுக்கு அனுமதியளிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.