நாமல் உப ஜனாதிபதி போல் செயற்படுகிறார் – ஹிருணிகா

இளைஞர்கள், யுவதிகளுக்கு உண்மை என்ன என்பது புரியும் எனவும், அவர்கள் குரக்கன் சால்வை மாயையில் சிக்க மாட்டார்கள் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற இளம் மக்கள் பிரதிநிதிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை அரசாங்கத்தில் இருக்கும் எவரும் விரும்பவில்லை.
நாமல் ராஜபக்ச மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவாக நாட்டில் இருக்கும் ஒரே இளம் அரசியல்வாதி. நாமல் உப ஜனாதிபதியை போல் செயற்படுகிறார். அவரை ஐயா என்று அழைக்கும் நிலைமை அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசியல், கலை, விளையாட்டு என அனைத்தையும் குடும்ப ஆட்சிக்கு உட்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் வெறும் பொம்மைகள் மாத்திரமே.
இந்த நிலைமை மாற்றியமைத்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பொது வேட்பாளருடன் இணையுமாறு நான் இளைஞர்கள், யுவதிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றேன் என ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
இளம் அரசியல்வாதிகளான முன்னாள் அமைச்சர் துமிந்த சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன, ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஊழல் நிறைந்த ஜனாதிபதியை விட்டே விலகியிருக்கிறேன்: ஹிருனிகா
சுதந்திர கட்சியிலிருந்து என்னை விலக்கி விட்டதாக கடிதம் அனுப்பியிருக்கும் மேதகு ஜனாதிபதி அவர்களே நான் கட்சியை விட்டு விலகவில்லை ஊழலும் முறைகேடுமான ஆட்சி புரியும் உங்களை விட்டும் உங்கள் பாவச் செயல்களை விட்டுமே விலகியிருக்கிறேன். என்பதை பகிரங்கமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர.
முன்னதாக தன்னை, தனது தலைமுறையை கட்சியை விட்டு நீக்குவதை விட போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கொலை மற்றும் கொள்ளையுட்பட பாலியல் வல்லுறவுகள் புரியும் பாதகர்களை ஜனாதிபதி கட்சியை விட்டு நீக்கட்டும் இல்லாவிட்டால் இறுதியில் இவ்வாறான பாதகர்களே கட்சியில் எஞ்சியிருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila