எதிர்வரும் 8 தூய ஜனவரியா அல்லது கறுப்பு ஜனவரியா?

இலங்கையில் மிகவும் சூடு பிடித்துள்ள தேர்தல் களமானது இலங்கை வரலாற்றில் 70 வருடங்களுக்கு முன்பு நடந்த நல்லாட்சியை உருவாக்குவதற்காக ஒருவருக்கும் ஆசியாவின் அதிசயமிக்க நாடாக மாற்றியுள்ளதாக சொல்லும் அதிபருக்கும் இடையில் நடக்கும் இந்த தேர்தல் போர் முற்றிலும் தம் இனம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக மட்டுமே.
நாம் அனைவரும் மறக்க முடியாத கறுப்பு யூலை போன்று இன்னும் ஒரு கறுப்பு ஜனவரியா அல்லது தூய ஜனவரியா என்பதை எதிர்வரும் 8 ம் திகதி முடிவு செய்யவுள்ளது. ஆனால் தற்போதே தேர்தல் வன்முறைகளும் அதிகரித்துள்ளன.
இதில் தமிழர்கள் சார்பில் ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.தமிழர் தரப்பில் கதைப்பவர்கள் தங்களது நலன் மற்றும் பதவிக்கு பாதகம் விளைவிக்காமல் மக்களை பகடைக் காய்களாகவே கையாளுகின்றனர்
இரண்டு பேரும் தமிழ் மக்களிடம் வாக்கு வேண்டாம் என்பது எங்களுக்கு வாக்களிங்கள் என்பதே அர்த்தமாக உள்ளது. அதுமட்டுமன்றி மனிதனாக பிறந்தவனுக்கு மனசாட்சி இருக்க வேண்டும். மனசாட்சியே இன்று இவர்களை உறுத்துகின்றது நன்மை செய்திருந்தால் நேர்மையாக வாக்கு கேட்க முடியும் செய்தவை அனைத்தும் துரோகமே.
ஆனால் தமிழர்கள் அனைவரும் காலையில் எழும்பி கட்டாயம் வாக்களிக்க வேண்டும் இலங்கையில் தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரே உரிமை வாக்குரிமை மட்டும்தான்.
ஜனாதிபதியோ அல்லது தமிழ் அரசியல்வாதிகளோ தங்களது மக்கள் இலங்கையில் இருக்கின்றார்கள் என்ற நினைப்பு வருவது தேர்தல் காலங்கள் வந்தால் மட்டுமே தற்போதைய நிலையாக உள்ளது.
இல்லை என்றால் வாக்களித்து விட்டார்கள் எம்மால் முடிந்த வரை சம்பாதிப்போம், வெளிநாடு செல்வோம், சொகுசு வாகனம் வாங்குவோம் என்று நினைப்பதை தவிர வாக்களித்த மக்கள் பசி பட்டினி என்பது இவர்களுக்கு நினைவில் வருவதில்லை.
இன்று தேர்தல் களத்தில் நிற்கின்ற 2 ஆசாமிகளும் தமிழர்களின் குரல்வளையை இறுக்கியவர்கள் தான். அனாலும் இந்த தேர்தல் பிரச்சார மேடைகளை பார்க்கும் போது தமிழனின் வாக்கே ஜனாதிபதியை தீர்மானிக்கும் என்பது தெட்டத் தெளிவாக விளங்குகின்றது.
தமிழர்கள் சார்பில் தலைவர்களாக இருப்பவர்கள் அமைதி காக்கின்றார்கள். ஆனால் தமிழர்கள் சிந்தித்து செயலபடுவார்கள் என்று அறிக்கை மட்டும் விடுகின்றனர். தங்களால் சுயமான முடிவினை எடுக்க தவறிவிட்டு மக்கள் மீது சுமையை அதிகரிக்கின்றனர்.
அமைதி காப்பது சிறந்தது என்றால் கடந்த 60 வருட காலமும் அமைதி காத்து என்ன ஆனது, வாக்களித்த மக்களின் நலன் சார்ந்த விடயங்களை விடவும் துரோகம் இளைத்த இந்தியாவின் சொல்லுக்கு மதிப்பளிக்கும் தமிழ் தலைமைகள் இலங்கை அழிவுக்கு இந்தியா தான் முதல் துரோகி என்பதை மறந்துவிடக் கூடது.
ஆசியாவின் அதிசயம் இலங்கை வருகின்ற காலங்களில் இலங்கையில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இலங்கையன் என்று சொல்வதை விட சீனன் ,இந்தியன், யப்பான் என்று சொல்லும் காலமே வரப் போகின்றது.
கடல் பரப்பு, நிலப் பரப்பு, நகரம் என அனைத்தும் வெளிநாடுகளுக்கு தாரைவார்த்து தற்போது இலங்கை பிரஜையிடம் மிகுதியாக உள்ளது தங்களுடைய உயிர்கள் மட்டும்தான்.
ஆகவே ஆசியாவின் அதிசயம் பாமர மக்களுக்கு அல்ல, அரசியல் வாதிகளுக்கு மட்டுமே அதிசயமாக இருக்கின்றது.
இன்று வடக்கு கிழக்கில் மிகவும் நுண்ணியமான முறையில் தமிழர்களின் அணைத்து விடயங்களும் சூறையாடப்படுகின்றது காரணம் அடக்குமுறை எம்மவர்கள் திருப்பி கேட்பதற்கு உரிமை அற்றவர்களாக இருக்கின்றர்கள்.
வட கிழக்கில் உள்ள இராணுவங்களை திட்டமிட்டு கலப்பு திருமணம் செய்ய வைத்து யுவதிகளின் வாழ்க்கையை சூறையாடுகினறைனர். இந்த இராணுவத்தினரை மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப முடியாது அரசாங்கம் செய்யும் இன அழிப்பில் இதுவும் ஒன்று.
இது போன்ற இராணுவங்களை சிங்கள மக்கள் மத்தியில் நடமாட விட்டால் சிங்கள யுவதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நோக்காக கொண்டு அரசாங்கம் கட்டவிழ்த்த நடவடிக்கையே வடக்கு கிழக்கின் சிங்கள மயமாக்கல்.
இது போன்ற பாரிய பிரச்சினைக்கு மத்தியில் இராணுவத்தை வெளியேற்று என்று நாம் கூறினால் எப்படி அரசாங்கத்தால் செய்ய முடியும். இராணுவத்தை வெளியேற்றுவது நடைமுறையில் நடக்காத விடயமாகவே இருக்கும்.
இந்த தேர்தல் களமானது இரண்டு அசுரனுக்கு நடக்கும் யுத்தமே தவிர, தமிழர்களுக்கு எந்த நலனும் இல்லை. அப்படியே எதாவது ஒரு நன்மை வரும் என்று எதிர்பார்த்தாலும் இந்தியாவின் தலையீட்டால் அது முறியடிக்கப்படும் என்பதே உண்மை.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் முஸ்லிம் பாமர மக்கள் உங்களுக்கு சேவை செய்பவர்களை நீங்களே தேர்ந்தெடுத்து நிறுத்த வேண்டிய கடமை உங்கள் கைகளிலே உள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெயர்வு அனர்த்தம், அடக்குமுறை என நசுக்கப்பட்டு கல்வியறிவில் நல்ல நிலைமையில் இல்லாமல் எமது மக்கள் ஏமாற்றப்பட்டது போதும், இனிவரும் காலங்களில் நீங்கள் சிந்திக்க வேண்டும்.
கண்களை மூடி முட்டாள் போல் வாக்களித்து இன்று ஒரு நேரம் சாப்பிடுவதற்கு தடுமாறும் எமது முதியவர்களின் எதிர்காலத்தினை விடிவுக்கு கொண்டுவருவது வருங்கால சமுகத்தின் கடமையாகும்.
எஸ் கே
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila