(2ம் இணைப்பு) மஹிந்த தரப்பிலிருந்த 20 உறுப்பினர்கள் மைத்திரியுடன்? கருணாவும் மைத்திரி பக்கம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரொஜினோல்ட் குரே, சரத் அமுனுகம, பியசேன கமகே, அததாவுட செனவிரட்ன, ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட பதினைந்து பேர் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.

தற்போது புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரியின் வீட்டில்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 20 முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளனர்.
ஜனக்க பண்டார தென்னகோன், பியசேன கமகே, சரத் அமனுகம, ரொஜினோல்ட் குரே, அதாவுத செனவிரட்ன ஆகிய முன்னாள் அமைச்சர்களும் அதில் அடங்குகின்றனர்.
மேலும் ஜகத் புஷ்பகுமார, பீலிக்ஸ் பெரேரா, எஸ்.பி. நாவின்ன, விஜித் முனி சொய்சா, விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
முக்கியமான வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் அங்கு சென்றுள்ளனர்.
கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு 10 டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழக் கூட்டத்தில் குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கருணாவின் ஆதரவினை மைத்திரிபால ஏற்றுக்கொள்வாரா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
ஏனெனில், தலாதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் கருணாவிற்கு தொடர்பு இருப்பதாகவும் கருணாவை தண்டிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் காலத்தில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தரப்பினர் கருத்து வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila