மலையக வாக்காளர்களுக்கு கொடுக்க மதுபான போத்தல்களை சட்ட விரோதமாக கொண்டு சென்ற 4 பேர் நேற்று ஹட்டன் பொலிஸாரால் இரவு 7.30 மணியளவில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படியே விரைந்து சென்ற பொலிஸார் லொறியை சுற்றிவளைத்து விசாரணை மேற்கொள்ளும் போது இவ்வாறு மதுபான போத்தல்கள் கொண்டு செல்கின்றமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து லொறியில்; பயணித்த நால்வரையும் கைது செய்துள்ளனர். இதில் பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடதக்கது.
தலவாக்கலையிலிருந்து மஸ்கெலியா, கினிகத்தேனை ஆகிய பகுதிகளுக்கு லொறியில் 795 மதுபான போத்தல்கள் கொண்டு சென்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இதன் பெறுமதி 8 இலட்சம் ரூபா என ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.