யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் 6ஆயிரத்து 384 ஏக்கர் காணிகளில் 1000 ஏக்கர் காணியை முதலில் விடுவிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இந்த யோசனையை அமைச்சரவை அங்கீகாரித்துள்ளது என அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்படவுள்ள 1000 ஏக்கரில் முதற்கட்டமாக 240 ஏக்கர் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வலி.கிழக்கு வளலாய் பகுதியிலேயே முதலில் விடுவிப்பு இடம்பெறவுள்ளது. அதற்கமைய குறித்த பகுதியில் மாதிரிக் கிராமம் ஒன்றினை சகல வசதிகளுடனும் அமைத்து மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ளப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
இதேவேளை 2013ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மகிந்த அரசின் ஆட்சியில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் அரசியல் கட்சியினதும் மக்களின் எதிர்ப்பிலும் திட்டம் கைவிடப்பட்டது.
எனினும் அதேதிட்டத்தினையே மைத்திரி அரசு விடுவித்து மாதிரிக் கிராமமாக மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.