பின்னர் சிலர் வீட்டின் கதவினை காலால் உதைத்தார்கள். பின்னர் என்னுடைய பெயரை கூறி வெளியே வா என கடும்தொனியில் கத்தினார்கள்.இதனையடுத்து, நான் வெளிச்சத்தை போட்டுவிட்டு வெளியே வந்து மதிலால் எட்டிப் பார்த்தபோது வீட்டிலிருந்து 50 யார் தொலைவில் வெள்ளை நிற வாகனம் ஒன்று நின்றது. அதற்கருகில் சிலர் வாள் மற்றும் கம்பிகளுடன் நின்றிருந்தனர். அவர்கள் என்னைப் பார்த்து தீவகத்திற்குள் இனிமேல் நுழைந்தால் குடும்பத்தோடு அழிக்கப்படுவாய் என திட்டினார்கள்.பின்னர் அவர்கள் சென்று விட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் நான் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்திருக்கிறேன் என்றார். |
தீவகத்தில் கால் வைத்தால் குடும்பத்தோடு அழிப்போம்! - மாகாணசபை உறுப்பினர் விந்தனுக்கு மிரட்டல்.
Related Post:
Add Comments