வேறு வழியில்லாமல் தூண்டிலில் மாட்டிக்கொண்ட சம்பந்தன் ஐயா: தீர்மானத்தை மதிக்கவேண்டுமாம் !


விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று வர்ணித்தவர் ! சிங்களத்தின் தேசிய கொடியை எடுத்து கையில் வைத்து அசைத்தவர் ! அது யார் என்று கேட்டால் சிறுபிள்ளையும் சொல்லிவிடும் அது சம்பந்தர் தான் என்று. இலங்கை அரசுக்கு அதிக நெருக்குதலை கொடுக்க கூடாது என்று இணக்க அரசியல் நடத்தும் சம்பந்தர் ஒரு நாளும், இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றுள்ளது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டு சொன்னதே கிடையாது எனலாம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் , யாழ் மாகாண சபையில் இலங்கையில் நடந்தது இன அழிப்பு தான் என்ற தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து கடும் ஆத்திரம் அடைந்த நபர்களில் இருவர் உள்ளார்கள்.
அவர்கள் வேறு யாரும் அல்ல , சம்பந்தரும் சுமந்திரனும் ஆகும். கட்சியோடு கலந்து ஆலோசிக்காமல் வடக்கு முதல்வர் எவ்வாறு இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வருவார் என்று சுமந்திரன் தனது நண்பர்களோடு பேசியுள்ளார். இதனை சம்பந்தரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இதேவேளை BBC தமிழ் சேவை சம்பந்தரை தொடர்புகொண்டு வட மாகாணசபையின் தீர்மானம் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று வினவியுள்ளார்கள். உடனே அந்தர் பெல்டி அடித்த சம்பந்தர் "வட மாகாணசபையின் தீர்மானம் மதிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila