|
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி
பண்டாரநாயக்கவுக்கு எதிராக ஊழல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு
விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய
பணிப்பாளர் நாயகம் குறித்த வழக்கை நிறைவு செய்ய விரும்புவதாகத்
தெரிவித்தார்.
எனினும் ஷிராணி பண்டாரநாயக்க சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நளின் லத்துவாஹெட்டி, மத்திய வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் சில அதிகாரிகளின் உடந்தையிலேயே இவ்வழக்கு சோடிக்கப்பட்டிருந்ததாகவும், அவரின் வங்கிக் கணக்கில் அவரது அனுமதியின்றி சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்தார். அதுமாத்திரமல்லாது இந்த நடவடிக்கைக்கு உடந்தையான குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்தாத வரையில் இந்த வழக்கை நிறைவு செய்ய அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
தன் மீதான மோசடி வழக்கை நிறைவு செய்ய மறுத்தார் ஷிராணி பண்டாரநாயக்க!
Add Comments