எமது விடுதலை பற்றி சிந்தியுங்கள்: அரசியல் கைதிகள்

பல ஆண்டுகளாக பயங்கரவாத தடைச்சட்டத்திற்குள் சிக்குண்டு நாம் எம்வாழ்கையை சிறைகளுக்குள் தொலைத்துள்ளோம்.எமது குடும்பங்கள் கண்ணீரும் சோறும் உண்டவர்களாய் வாழ்ந்துவருகின்றார்கள்.
அரசியல் கட்சிகளின் வாசலுக்கும் போராட்டங்களுக்கும் சென்று சென்று எங்கள் குடும்பங்களின் நலிந்துபோயுள்ளன.நாம் உளவியல் ரீதியாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம் என அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
எமது விடுதலை நாளுக்காக ஒவ்வொரு நாளும் ஏங்கிவருகின்றோம். எமது குடும்பங்களும் தினம் தினம் எங்கள் வரவுக்காய் காத்திருக்கின்றன.
இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசாங்க மாற்றத்தின் மூலம் எமக்கு ஒரு புதுவாழ்வு கிடைக்குமென்று நம்பிக்காத்திருக்கின்றோம்.
தற்பொழுது எங்கள் விடுதலைகோரி வடக்கு கிழக்கில் எங்கள் உறவுகள் ஜனாதிபதியையும் புதிய அரசாங்கத்தையும் நோக்கி எங்கள் விடுதலைக்காய் கோரிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த நாட்டின் ஒரு நல்லிணக்கம் ஏற்படுவதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் புலம்பெயர்ந்த வாழும் மக்களில் ஒரு சிலர் இனவாதத்தை தூண்டி எமது விடுதலையை தாமதப்படுத்த முயல்வதாகவே எண்ணத்தோன்றுகின்றது.
நாம் அறிகின்ற சில சேதிகள் கவலை தருவதாகபடுகின்றது. இந்த நாட்டில் இன்னும் பயங்கரவாத சட்டம் நீக்கப்படவில்லை.
தென்னிலங்கை மக்களுக்கு இன்னும் எம்மை பற்றிய புரிந்துணர்வு ஏற்படவில்லை.இந்த நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் கருத்துக்களும் போராட்டங்களும் எமக்கு குந்தகமாக அமைந்துவிடக்கூடாது என வேண்டுகின்றோம்.
எங்களை கொஞ்சம் வெளியில் வந்து பிள்ளைகளோடு வாழ உதவுங்கள், எம்மை பற்றிய புரிதலற்ற தன்மையில் இருந்து தென்னிலங்கையின் அப்பாவி சிங்கள சகோதர, சகோதரிகள் விடுபட நிலத்திலும் புலத்திலும் வாழ்கின்றவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவது அவசியம்.
இப்பொழுது நமக்கு தேவை காணாமல் போன நமது உறவுகள் நமக்கு கிடைக்கவேண்டும். சிறையில் பல ஆண்டுகளாக தம் இளமைகளை தொலைத்து வாழ்கையை தொலைத்து வதைகின்றவர்கள் விடுதலையாகவேண்டும்.
இந்த மானுட ஏக்கம் அனைவருக்கும் புரியும் என நினைக்கின்றோம் என இலங்கையில் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila