சாய்ந்தமருது நகரில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் விவசாய அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த செய்தியை அடுத்து ஆத்திரமடைந்த சாய்ந்தமருது மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்த முடிவை எதிர்ப்பதாக அறிவித்துள்ளனர்.
பெருந்தொகை வாக்குகளை வழங்கிய சய்ந்தமருது மக்கள் சார்பில் ஒருவரை கிழக்கு முதலமைச்சராக நியமிக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.
அமைச்சர் ஹக்கீமின் உருவபொம்மையை ஏந்தியவாறு அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய மக்களது ஆர்ப்பாட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சர் ஹக்கீமின் உருவப்பொம்மையை எரிப்பதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முயற்சித்த போதிலும் பொலிஸார் அதனை பறித்துச் சென்றதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.