திருகோணமலை கடற்படை முகாம் மற்றும் கோத்தா முகாம் விவகாரங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டுவருவதாக வியாழக்கிழமை சபையில் தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு, இடர்முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல்போதல்கள் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.