இலங்கையின் இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் ரபுக்பொத்த நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 23ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இராணுவ சேவையில் உள்ள 15 மேஜர் ஜெனரல்கள் மற்றும் மூன்று பிரிகேடியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கவின் பணிப்பில் சேவை அவசியம் கருதி இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி இராணுவ சுயாதீனப்படையின் அதிகாரியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் லலித் தலுகல இராணுவ தலைமையக அபிவிருத்தி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமையகத்தின் கட்டளையதிகாரியாக இருந்த லால் பெரேரா கிழக்கு மாகாண தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா தலைமையகத்தின் கட்டளையதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் சன்ன பி குணதிலக்க இலங்கை இராணுவத்தின் சுயாதீனப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தலைமையக மத்திய கட்டளையதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வன்னி கட்டளையதிகாரியாக இருந்த பொனிபொஸ் பெரேரா தலைமையக அதிகாரி அலுவலகத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இராணுவ தலைமையகத்தில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த யாழ்ப்பாண கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ஜே வலகம கிழக்கின் தலைமையக கட்டளைய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண தலைமையக அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், இராணுவ தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். வன்னிக்கான கட்டளை தளபதியாக அமல் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.