மைத்திரியும் விரைவில் மஹிந்தவாக மாறுவார்

news
 ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைப் போல விரைவில் உருவாகுவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவர் அனைத்து அதிகாரங்க ளையும் தனது சட்டைப் பையில்தான் வைத்திருப்பார் என்று ஐக்கிய சோசலிசக் கட் சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
யாழ்.ரிம்மர் மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கை யில்
 
மைத்திரிபால சிறிசேன முன் னர் 10 வருடங்களாக மஹிந்தவுடன் இருந்து பாவங்களைச் சுமந்தவர். வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழ் பேசும் மக் களின் வாக்குகளால் ஜனாதி பதியானவர்.  அந்தத் தேர்தலில் மைத்திரி வாக்குறுதி களை அள்ளி வழங்கவில்லை. முதலில் மஹிந்தவைத் தோற் கடிப்போம் பிறகு ஏனைய வற்றைப் பார்ப் போம் என்றே அடிமட்ட மக்களும் விரும்பினர். 
 
தென்பகுதி சமூகத் தில் இனவாதம் மிக அதிகமானது. இந்தியா இலங்கை அரசுடன் சேர்ந்தே இருக்கும். தமிழ் மக்க ளின் பிரச்சினைகளை அது தீர்க்கப் போவதில்லை. தமது நலனுக் காகவே இந்தி யப் பிரதமர் மோடி இலங்கை வந்து சென்றார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது. அவர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. எனவே வட பகுதி இளைஞர்கள், மக்கள் மத் தியில் ஜனநாயக அடிப்படையி லான  கருத்தை உருவாக்குங்கள். எம்முடன் இணைந்து செயற்படுங் கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கதைப்பதனால் எமக்குத் தென்பகுதியில் எதிர்ப்பும் நிலவுகிறது என்று அவர் கூறினார். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila