புதிய அரசாங்கம் பொறுபேற்றுள்ள நிலையில், ஏன் இவ்வாறான கொலைகள் நடக்கின்றது என்று மர்மமாக இருப்பதாக கூறப்படுகிறது. உடல் பாகம் இல்லாத சடலம் ஒன்று மாதிவல தியவன்னா ஓயாவில் காணப்பட்ட நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலத்தில் ஒரு கை இருக்கவில்லை. இதற்கு முன்னர் தெமட்டகொடை பிரதேசத்தில் ஆறு ஒன்றில் இருந்து இரண்டு மனித கால்கள் மீட்கப்பட்டதுடன் வெலிக்கடை நாவல ஆற்றில் ஒரு மனித கை மீட்கப்பட்டது. அத்துடன் தெமட்டகொட பிரதேசத்தில் எரிந்து போன சடலமும் மீட்கப்பட்டது. எவ்வாறாயினும் இது சம்பந்தமாக விசேட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. |
கொழும்பில் துண்டிக்கப்பட்ட நிலையில் மனித உடல் பாகங்கள்! - மர்ம கொலைகளால் பரபரப்பு
Related Post:
Add Comments