அனுரதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நீதி மன்ற விசாரணைக்களுக்காக நேற்று (30) வவுனியா உயர்நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அங்கு நீதிபதியின் முன் மேற்படி விடயம் தொடர்பில் கைதிகளால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக அவர்களை நீதிமன்றில் பார்வையிடுவதற்காக சென்றிருந்த குடும்ப அங்கத்தினர் தெரிவித்தனர்.
அவ்வாறு முறைப்பாடு செய்தமையினால் ஆத்திரமடைந்த சிறை அதிகாரிகள் குறித்த அனுரதபுரத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட அரசியல் கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்க அனுமதி மறுத்துள்ளதுடன், அவர்களுக்காக எடுத்துச் சென்றிருந்த உணவுப் பொருட்களையும் வழங்க விடாது கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி துரத்தியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
மாலை வேளை வரை வீதியில் கண்ணீரோடு நின்று மன்றாடியபோதும் ஈவிரக்கம் ஏதுமின்றி கைதிகளாக உள்ள தமது உறவினர்களை பார்வையிட அனுமதி மறுத்துவிட்டதாகவும் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.
அனுரதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதிகளை வவுனியாவுக்கு அழைத்து வருவதற்குப் பொறுப்பான அதிகாரியாகவுள்ள சிறீசேனா என்பவரும் சுனித்சந்திரநாத் என்ற சிறை அதிகாரியுமே மேற்படி சித்திவதைகளை மேற்கொள்வதாக அறிய முடிகின்றது.
Add Comments