சிலோன் ருடே என்ற ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
அடுத்த தேர்தலில் தேர்தலில் நான் வெல்லவேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். மக்களுடைய ஆணையை ஏற்று தேர்தலில் தோற்றால் நான் அரசியலைவிட்டே விலகுவேன் என சுமந்திரன் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு மேலதிக காலஅவகாசம் தேவைப்படுவதாகவும் அதனை வழங்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஒருபோதுமே பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லை. இனிமேல் ஒரு போர் உருவாக்கப்பட்டாலும் அதற்கு மக்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.