ஊடகவியலாளர் கடத்தலின் பின்னணியில் ஈபிடிபி! –கதறும் பெற்றோர் (காணொலி)

Rama_father_and_mother.jpg?resize=283%2C
‘என்ர பிள்ளையின்ர முகத்தை பார்த்திட்டுத்தான் சாகவிரும்பிறம், என்ர பிள்ளை இருக்கிறானோ இல்லை எண்டு கண்டு பிடிக்கிறதக்கு உதவுங்கோ” என இராணவத்தால் கடத்தப்பட்ட ஊடகவியலளார் சுப்பிரமணியன் இராமச்சந்திரனின் பெற்றோர் தமிழ்நெற்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளனர்.
Subramaniam_Ramachandran.jpg?resize=140%
யாழ்.தினக்குரல் மற்றும் வலம்புரிப் பத்திரிகையின் வடமராட்சிப் பிராந்தியச் செய்தியாளராக இருந்த சுப்பிரமணியம் இராமச்சந்திரன் 2007 ஆம் ஆண்டு யாழ். வடமராட்சி கலகை சந்தியில் வைத்து சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்தார். 9 மற்றும் 12 வயதுள்ள இரு குழந்தைகளுக்குத் தந்தையான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு எட்டு ஆண்டுகள் உருண்டோடிய நிலையிலும் இதுவரை அவர் தொடர்பான எந்தத் தகவலும் தெரியாமல் கவலையடைந்துள்ள பெற்றோர் இந்தக் கடத்தலில் பின்னணியின் ஈபிடிபியின் கரங்கள் இருப்பதாக உறுதியாக நம்புகின்றனர்.
இவரின் நிலைமை குறித்து கவலைகொண்டுள்ள அவரது 85 வயதான தந்தையும் 83 வயதான தாயும் தமிழ்நெற்றுக்கு வழங்கிய செவ்வி:

நன்றி : தமிழ்நெற்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila