ஆட்சி மாறினாலும் ஆமி மாறவில்லை! அனந்தியை திருப்பியது ஆமி!!

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருக்கும் பலாலி கிழக்கு  இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனி திங்கள் நிகழ்வினை முன்னிட்டு வழிபடச்சென்றிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

படையினரது ஆக்கிரமிப்பினில் இருக்கும் உட்பகுதிகளது செழிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிவருவதை தடுக்கவே தடைவிதிக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.பதிவு இணைய செய்திகள்

முன்னதாக இன்றைய தினம் பங்குனி திங்கள் நிகழ்வினை முன்னிட்டு பக்தர்களை உள்ளே செல்ல அனுமதிப்பதாக படைத்தரப்பு அறிவித்திருந்தது.இதற்கு முன்னரும் பக்தர்களினில் ஒரு பகுதியினரை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அழைத்து சென்றிருந்த நிலையினில் அங்கு அமைந்திருந்த மாட்டுப்பண்ணைகள் போன்றவை தொடர்பினில் தகவல்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையினில் தனது பிறந்த மண்ணான பலாலி கிழக்கினில் அமைந்துள்ள இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனி திங்கள் நிகழ்வினை முன்னிட்டு வழிபடச்சென்றிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனையே இன்று படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

முதலில் அவரது கைத்தொலைபேசி மற்றும் புகைப்படக்கருவிகளை கையளித்துவிட்டு உள்ளே செல்லுமாறு படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.பதிவு இணைய செய்திகள்

எனினும் தான் ஒரு மாகாணசபை உறுப்பினரெனவும் தனது கைத்தொலைபேசியினையாவது கொண்டு செல்ல அனுமதிக்குமாறும் அனந்தி கோரியுள்ளார்.

இதனையடுத்து எழுந்த முரண்பாட்டையடுத்தே அவரை உள்ளே செல்ல படையினர் அனுமதித்திருக்கவில்லை.இதனிடையே அவர் பயணித்த ஒட்டோ வாகனத்தை படையினர் சுற்றிவளைத்துக்கொண்டதாகவும் எனினும் இராணுவப்பொலிஸார் தலையிட்டு அவரை வெளியேற அனுமதித்ததாகவும் தெரியவருகின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila