அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு உந்துருளிகளுக்கான இலக்கத்தகடுகள் வழங்கப்பட்டும் அவை பொருத்தப்படாது காணப்படுவதுடன் சில பிரதேசங்களில் சமூக விரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து உந்துருளிகளுக்கும் உரிய நிறுவனத்திற்கு இலக்கத்தகடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதனுடன் மோட்டார் சைக்கிள்களுக்கான காப்புறுதிப்பத்திரங்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் பெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும் வழங்கப்பட்ட உந்துருளிகளுக்கு இலக்கத்தகடுகள் பொருத்தப்படாது காணப்படுவதுடன் சமூகவிரோத செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
அத்துடன் அரச வெளிக்கள உத்தியோகத்தர்கள் அல்லாதோர்களும் இவ்வுந்துருளிகளைப் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது.
எனவே இவ்விடயத்தில் வீதி போக்குவரத்து பொலிஸார் கவனம் செலுத்தி சட்ட விரோத உந்துருளி பயன்பாட்டை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.