பதவி பித்து பிடித்த மகிந்தவின் புதிய சூழ்ச்சி அம்பலம்

முன்னாள் அரசாங்கத்தின் பிரபல இராணுவ அதிகாரி ஒருவரும் சாதாரண இராணுவ அதிகாரிகள் சிலருடன் இணைந்து இலங்கைக்கும், இராணுவத்தினர் உட்பட படையினருக்கும் எதிராக சூழ்ச்சி திட்டம் ஒன்றை தீட்டி வருவதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
சிங்கள ஊடகமொன்று இது தொடர்பிலான செய்திகளை வெளியிட்டுள்ளது.
மகிந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிக்கு எதிராக தற்போது நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் சிக்கலில் விழுந்துள்ள ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர்,
தனக்கு தப்பிக்கும் சரியான வழி யுத்தக்குற்றச்செயல் ஊடாக தனது உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தலை வெளிகாட்டி தன்னை தேசப்பற்றுடையவனாக காட்டிக் கொள்ளும் நோக்கில் இவரும் இவருக்கு நெருங்கியவர்களும் இவ்வாறான ஒரு சூழ்ச்சியை மேற்கொண்டு வருவதாகவும் தெரவிக்கப்படுகின்றன.
இந்நாட்டு இராணுவ வீரர்களை யுத்தக்குற்றவாளிகளாக காட்ட திட்டம் செயற்படுத்தப்படுவதாகக் கூறி 'புதிய யுத்தக்குற்ற ஆவணப்படங்களை தயாரித்து அதனை இணையத்தில் வெளியிட்டு அவர்களுக்கு ஆதரவான ஊடகங்கள் மூலம் பாரிய பிரபல்யம் ஒன்றை ஏற்படுத்தி சூழ்ச்சியை முன்னெடுக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காணொளியில் நடிக்கவென ராஜபக்சவுக்கு ஆதரவான இராணுவ வீரர்கள் சிலரை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தினர்களுக்கு எதிராக சனல்4 ஆவனப்படம் செய்தது போன்று இந்த காட்சிகளை ஔிபரப்பி வெளிநாட்டவர் ஒருவரைக் கொண்டு இந்த யுத்தக் குற்றங்களுக்கு ராஜபக்ச பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர்களை யுத்தக்குற்ற நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தவுள்ளதாக தெரியவருகிறது.
தற்போது ராஜபக்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் மோசடி குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவென இலங்கை மக்களை ஏமாற்றி இவ்வாறு ஒரு திட்டத்தை இவர்கள் தீட்டி வருவதோடும்,
இதன்மூலம் இலங்கை மற்றும் இராணுவத்தின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜபக்சர்களினால் மேற்கொள்ளபட்டுவரும் இத்திட்டமானது கீழ்த்தரமான சூழ்ச்சியாகும்.
இது குறித்து உரிய அதிகாரிகள் புலனாய்வு பிரிவினர் உடன் ஆராய்ந்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இராணுவ சட்டத்தின்படி தண்டனை வழங்க வேண்டும்.
ராஜபக்ஷக்கள் தங்களை ஊழல் மோசடி குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றிக் கொள்ள தாய் நாட்டையும் இராணுவத்தையும் நாட்டு மக்களையும் காட்டிக் கொடுப்பவர்கள் என்பது இந்த சூழ்ச்சித் திட்டத்தில் இருந்து தெளிவடைவதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila