முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஊழல் மோசடிகள் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாயற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மஹிந்தானந்த அலுத்கமகேவிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சதொச நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 39 மில்லியன் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போதிலும் விளையாட்டுத்துறை அமைச்சு அதற்கான கொடுப்பனவை செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.