முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.
இதன்போதே குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முச்சக்கரவண்டி தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டார்.
அத்துடன் இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இலங்கை இராணுவத்துக்கு உரித்துடையது என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களை மீண்டும் எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டுள்ளார்.
கடந்த 2006 நவம்பர் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8:45 மணியளவில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்டவுனில் உள்ள தனது வீட்டுக்கருகில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சம்பவத்தினைத் தொடர்ந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.
இதன்போது, ரவிராஜின் மெய்ப் பாதுகாவலரான லக்சுமன் லொக்குவெல்ல என்பவரும் கொல்லப்பட்டார்.
அத்துடன்இ டி-56 ரக துப்பாக்கி ஒன்றும் சில ரவைகளும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.