ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன தோற்கடிப்பதற்கு தெளிவான, முக்கிய காரணமாக காணப்பட்டவை இலங்கையின் சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகள்.
இந்த மக்கள் ஆணை என்பது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் வளர்ச்சியடைந்து வந்த ஏதேச்சதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சியை அகற்றக்கூடிய ஜனநாய , பொறுப்புக்கூறும் அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக மாத்திரம் வழங்கப்படவில்லை.
இலங்கையின் சமூகத்தை பிடித்துள்ள தொடர்ந்தும் தொந்தரவு செய்துக்கொண்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும் இந்த மக்கள் ஆணை வழங்கப்பட்டது. இதில் முக்கியமானது இராணுவமயப்படுத்தல்,விடுதலைப்புலிகளை தோற்கடித்த பின்னர் இலங்கை இராணுவம் அந்த நாட்டின் சமூகத்தில் அளவுக்கதிகமான முக்கியத்துவத்தை எடுத்துக்கொண்டுள்ளது.குறிப்பாக வடக்கில்.
தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இராணுவத்தின் அதிகளவான பிரசன்னத்தை, விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி குறித்த அச்சத்தை காரணம் காட்டி நியாயப்படுத்துகின்றனர்.
எனினும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தேர்தல்களில் ஆர்வத்துடன் வாக்களித்து, கலந்துகொள்வது.விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி குறித்த இந்த அச்சம் பிழையானது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை நிருபிப்பதாக அமைந்துள்ளது.
ராஜபக்ச அரசாங்கம் தனக்கு கிடைத்த இராணுவ வெற்றியை தொடர்ந்து படையினரை வர்த்தகநடவடிக்கைகள், கல்வி, சுற்றுலாத்துறை உட்பட பலவற்றில் ஈடுபட அனுமதித்தது.
எனினும் இந்த ஆபத்தான போக்கிற்கு வேகமாக முடிவுகட்டவேண்டும் என்பதே இலங்கையின் புதிய அரசாங்கம் குறித்த நிலைப்பாடாக காணப்படுகின்றது – குறிப்பாக சிறுபான்மையினத்தவர்களிடம்.
அமெரிக்காவின் ஓக்லான்ட் நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நல்லிணக்கம் என்று எதுவும் இல்லவேயில்லை என்பது புலனாகியுள்ளது. குறிப்பிட்ட அறிக்கை டிசம்பர் மாதம் முதல் ஜனவரி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை மையமாக கொண்டு அமைந்துள்ளது.
உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்களின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்துள்ளமையே மக்கள் மத்தியிலான சீற்றத்திற்கான முக்கிய காரணமாகவுள்ளது. மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் நீண்ட காலமாக மறக்கப்பட்ட நடவடிக்கையையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
யுத்தக்குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதி இதுவரைநிறைவேற்றப்படாமலிருப்பதும் தமிழ் மக்களின் சீற்றத்தினை அதிகரித்துள்ளது.
இலங்கையின் வடமாகணத்திலிருந்து எங்களுக்கு சமீபத்தில் கிடைத்த அறிக்கைகள் பொதுமக்களின் நிலங்களை இராணுவம் விடுவிப்பதில் வேகம் காணப்படுவதாக தெரிவித்துள்ளன.இது மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமயில் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகளை முன்னேற்றகரமான நில நடவடிக்கைகளாக கருதலாம்.
ஆனால் இவை மாத்திரம் போதுமானவையல்ல, தொடரும் இராணுவமயப்படுத்தல் காரணமாக ஆபத்தான விளைவுகள் உருவாகலாம், பாக்கிஸ்தான் இதற்கு மிகச்சிறந்த ஓரு உதாரணம்.
சர்வதேச அழுத்தமும், தேர்தல் முடிவுகளும் சிறிசேன அரசாங்கம் இராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் காணப்பட்ட ஏதேச்;சதிகாரத்தை அகற்றுவதற்கான ஆகக்குறைந்த நடவடிக்கைகளை எடுக்கச்செய்துள்ளது.
ஆனால் தற்போதைய தேவை- இராணுவத்தை விலக்கிக்கொள்வதற்கான முழுயைமான ஓரு திட்டம், இந்த திட்டத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களை விலக்கிக்கொள்வதும் இடம்பெற்றிருக்கவேண்டும்.