வைகை ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. அணை கட்டுமாறு பாண்டிய மன்னன் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்றான். மந்திரியாக இருந்த மாணிக்க வாசகரை சிறையில் அடைத்ததால் சிவன்கொண்ட கோபத்தின் காரணமாகவே வைகை ஆற்றின் பெருக்கு நடக்கிறது.
பெருக்கெடுக்கும் வைகை நதிக்கு அணையிடு மாறு மன்னன் இட்ட கட்டளையை நிறைவேற்ற மக் கள் முண்டியடிக்கின்றனர். அவரவருக்கு ஒதுக்கப் பட்ட அளவு அணையைக் கட்டியாகவேண்டும்.
எனினும் பாண்டிய நாட்டில் வாழும் செம்மனச் செல்வி என்ற மூதாட்டிக்கு அணையைக் கட்ட யாரு மில்லை. பிட்டு அவித்து விற்றுத் தன் சீவியம் நடத்தும் அந்த மூதாட்டி செண்பகப்பெருமானின் கோவில் சென்று, தாயுமிலி தந்தையிலி தமியேனைப் பேயிடை நின்றாலும் பிரித்தெறிய எண்ணாத யாருமற்ற ஏழை. மன்னனிட்ட கட்டளையை நீயே நிறைவேற்ற வேண்டும் என்று மன்றாடுகிறாள்.
செம்மனச்செல்விக்கு உதவ செண்பகப்பெரு மான் திருவுளம் கொண்டார். ஒரு கூலியாள் வேடத்தில் தோளில் மண்வெட்டியோடு செம்மனச்செல்வியின் வீட்டுக்கு செல்கிறார்.
கூலியாளரைக் கண்ட செம்மனச்செல்வி மிக்க மகிழ்ச்சியோடு தனக்கு உரித்ததான அணையைக் கட்டித் தருமாறு அந்தக் கூலியாளிடம் கேட்க, அதற்கு அவர் சம்மதிக்கிறார்.
சரி, நான் அணையைக் கட்டுவதற்கு என்ன கூலி தருவாய் பாட்டி? என்று வினவுகிறார் கூலியாள். என்னிடம் எதுவுமில்லை. பிட்டு அவித்து விற்று சீவி யம் நடத்துகிறேன். வேண்டுமானால் உண்பதற்கு பிட்டுத் தருகிறேன் என்கிறார் செம்மனச்செல்வி.
எவ்வளவு பிட்டு என்ற கேள்வியோடு மீண்டும் சிக்கல். சிக்கலை நீக்க ஓர் இணக்கப்பாட்டிற்கு வரும் பொருட்டு உதிர்ந்த பிட்டு எல்லாம் எனக்கென் கிறார் கூலியாள். செம்மனச்செல்வி அதற்கு சம் மதிக்கிறார்.
முன்பெல்லாம் பிட்டு, பிட்டுக்குழலில் அவிப்பது. அதனால் குழல்பிட்டு என்று அதற்கு அடைமொழி யும் உண்டு. விற்பனையின் பொருட்டு குழல்பிட்டு முறைமை வந்திருக்கலாம். குழல்பிட்டுக்கு இடையி டையே தேங்காய்ப்பூ. அவித்த பிட்டை குழலில் இருந்து உதிராமல் எடுப்பதும் ஒரு திறமை.
உதிர்ந்த பிட்டை கூலியாகத் தரலாம் என்று சம் மதித்த செம்மனச்செல்விக்கு பேரதிர்ச்சி. அவிக்கின்ற பிட்டெல்லாம் உதிர்ந்து விடுகிறது. என்ன செய்வது? நிபந்தனையின்படி உதிர்ந்த பிட்டு கூலியாளுக்கு வழங்கப்படுகிறது.
கூலியாளராக வந்து, பிட்டை உதிரவைத்து, தன் திருவிளையாடலைக் காட்டுகின்ற செண்பகப் பெரு மான் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத் தில் வேட்பாளராக நின்றால் எப்படி வெற்றியைத் தனதாக்குவார் என்று சிந்தித்தோம். பிரசாரம் எது வும் செய்யமாட்டார். யாழ்.மாவட்ட தேர்தல் தெரி வத்தாட்சி அலுவலரைச் சந்திப்பார். சந்தித்து பொதுத் தேர்தலில் அளிக்கப்படுகின்ற வாக்குகளில் செல்லுபடியற்ற வாக்குகள் அனைத்தும் எனக்குத் தரவேண்டும் எனக் கேட்பார்.
அட, செல்லுபடியற்ற வாக்குத்தானே! அதைக் கொடுத்துவிடலாம் என்று தெரிவத்தாட்சி அதிகாரி தீர்மானித்தால், தேர்தல் முடிவில் செண்பகப்பெரு மானுக்கே அதிக விருப்பு வாக்குகள். அவர் வெற்றி பெறுவது மட்டுமன்றி, செல்லுபடியற்ற வாக்குகளின் அதிக எண்ணிக்கையால் தேசியப் பட்டியலிலும் அவர் தரப்புக்கு இடம் கிடைக்கலாம். அட, இதெல்லாம் உதிர்ந்த பிட்டுத் தியரி.
தேர்தல் அதிகாரிகளே! செல்லுபடியற்ற வாக்குக ளைத் தவிர்க்க ஏதாவது பிரசாரம் செய்யுங்கள். கடந்த முறைபோல் இம்முறையும் ஏகப்பட்ட செல்லு படியற்ற வாக்குகள் வேண்டாம். நடவடிக்கை எடுங்கள்.