வெள்ள- மண்சரிவு அனர்த்தம்: பலி எண்ணிக்கை 71ஆக உயர்வு

BN-OB622_lankaf_P_20160518064541

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பாகங்களிலும் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 3 இலட்சத்து 75 ஆயிரத்து 604 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2 இலட்சத்து 78 ஆயிரத்து 528 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுள் 122 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து வருகின்றன. அந்தவகையில் அரநாயக்க பகுதியில் மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இன்று (சனிக்கிழமை) ஐந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறது. பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினர் மீட்பு பணிகளை முன்னெடுத்துவருவதாக மேல்மாகாணக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் மண்சரிவில் சிக்கி 144 பேர் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களுள் 22 பேர் சலடங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BN-OB622_lankaf_P_20160518064541
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila