அத்துடன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிக்காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன இந்த குழுவுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர்களில் சிங்கள இளைஞர்கள் இருவர் இருந்துள்ளனர். கோரிய கப்ப பணம் வழங்கப்படாததால், அந்த இளைஞர்களும் கொலை செய்யப்பட்டு விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
திருகோணமலை கடற்படை முகாமில் சித்திரவதை கூடத்தின் சுவர்களில் குறித்த சிங்கள இளைஞர்கள் தமது பெயர்களை எழுதியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்த இந்த தகவல் தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட குழுவொன்று அண்மையில் திருகோணமலை கடற்படை முகாமில் கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
சப்ரகமுவ மாகாணத்தின் முக்கிய அரசியல் பிரமுகரின் கோரிக்கைக்கு அமையவே இந்த சிங்கள இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் மற்றும் மேலும் சில சம்பவங்களுடன் வாஸ் குணவர்தன சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடற்படை பிரிவினருடன் வாஸ் குணவர்தனவும் மேலும் சில காவற்துறை அதிகாரிகளும் இணைந்து ஒரு அணியாக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் இந்த குழுவின் சிலர் சர்ச்சைக்குரிய சில கொலைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனிடையே ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு வாகனம் ஒன்று வெலிசர கடற்படை முகாமில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து வேகன் ரக வாகனம் ஒன்றை காவற்துறையினர் கடந்த வாரம் கைப்பற்றியிருந்தனர்.
காவற்துறையினருக்கு கிடைத்த 11 முறைப்பாடுகள் தொடர்பாகவே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
எனினும் மேற்படி கடற்படை குழுவினர் 28 இளைஞர்களை கடத்திச் சென்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் கப்பம் செலுத்திய சிலர் மாத்திரம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் தனிப்பட்ட உதவியாளர் சம்பத் முனசிங்க என்ற அதிகாரியிடம் இருந்து கடத்தப்பட்ட இளைஞர்களின் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டதை அடுத்தே இந்த தகவல் தெரியவந்தது.