கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பாராளுமன்றில் இன்று இதனை வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் செறிந்து வாழக்கூடிய பகுதிகளிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகளவான வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
இருந்தும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில், இன நல்லிணக்கம் என்பது சகல மொழிகளிலும், சகல செயற்பாடுகளிலும் இருக்க வேண்டும் என அவர் பாராளுமன்றில் இன்று வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நல்லாட்சி அரசாங்கமும் தமிழர் விடயத்தில் இன ரீதியான பாரபட்சம் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறுக்கிட்டு வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கருத்து வெளியிட்டதை தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.