இந்த சந்திப்பு அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் மீள்குடியேற்றம் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்களநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டது - சம்பந்தன் தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிடம் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் கருத்து தெரிவித்தார். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக நிறைவேற்ற மனித உரிமை பேரவை மற்றும் அமெரிக்கா தமது கடமைகளை முறையாக பேண வேண்டும் என இன்றைய சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, வட மாகாணத்தில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
த.தே.கூட்டமைப்பினர்-சமந்தா பவர் சந்திப்பு! தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- சம்பந்தன் வலியுறுத்து
Related Post:
Add Comments