வடக்கு மாகாணத்தின் மக்களுக்கு பயணிகள் போக்குவரத்து சேவையை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல ஒன்றுகூடல்கள் மூலம் ஐந்து மாவட்டங்களினதும் பிரதம கணக்காளர் இலங்கை போக்குவரத்து சபையினர் தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆகியோரும் இணைந்து தயாரிக்கப்பட்ட இணைந்த நேர அட்டவணையானது சீர் செய்யப்பட்டு இறுதி அறிக்கை வடக்கு போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவித்தல் வழங்கப்பட்ட ஐந்து மாவட்ட பிரதம கணக்காளர்கள், இலங்கை போக்குவரத்து ஆணையத்தின் வடக்கு இணைப்பாளர் , இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பிரதம முகாமை யாளர், வடக்கு தனியார் பேருந்தின் உரிமையாளர் சங்கங்களின் இணையத்தின் உறுப்பினர்கள், ஐந்து மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் பிரதிநி திகள் ஆகியோருக்கான இறுதிக்கட்ட கலந் துரையாடல் எதிர்வரும் 26 ஆம் திகதி வியா ழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் யாழ் ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள வடக்கு போக்குவரத்து அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.எனவே சகல அறிவித்தல் வழங்கப்பட்ட தரப்பினரையும் தவறாது சமுகம் அளித்து எதிர்வரும் டிசெம் பர் மாதம் முதலாம் திகதி முதல் இவ் இணைந்த நேர அட்டவணையை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு போக்கு வரத்து அமைச்சர் பணித்துள்ளார்